ட்விட்டரின் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பாரக் அகர்வால் -டெக் உலகை ஆளும் இந்தியர்கள்!!

ட்விட்டரின் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பாரக் அகர்வால் -டெக் உலகை ஆளும் இந்தியர்கள்!!

ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த ஜாக் டோர்சி பதவி விலகி உள்ள நிலையில், புதிய செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரின் சிஇஓ பதவியில் இருந்து ஜாக் டோர்சி விலகி உள்ளார். 16 ஆண்டுகள் அந்நிறுவனத்தின் துணை தலைவர், நிர்வாக தலைவர், தலைமை செயல் அதிகாரி என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த ஜாக் டோர்சி, தாம் பதவி விலகுவதற்கு இது தான் சரியான நேரம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியரான பராக் அகர்வால், ட்விட்டரில் புதிய செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

38 வயதேயான பராக் ஐஐடி பாம்பேவின் முன்னாள் மாணவர். இங்கு இளங்கலை பட்டத்தைப் பெற்ற அவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பி‌எச்டி முடித்தார். ஸ்டான்போர்டில் படிக்கும்போதே மைக்ரோசாஃப்ட், யாகூ மற்றும் ஏடி&டி லேப்ஸ் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். அதன்பிறகு 2011-ல் ட்விட்டரில் சாதாரண மென்பொறியாளராக இணைந்தார் பராக். 

அதன்பின் தனது திறனாலும் புதிய யுக்திகளாலும் ட்விட்டரில் பல முன்னெடுப்புகளை எடுத்து வெற்றிகண்டார் பராக். டிசம்பர் 2016-ல் நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஆடம் மெசிங்கரின் CTO பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பத்திலிருந்த ட்விட்டருக்கு விடையாகக் கிடைத்தார் பராக். 2018-ல் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) சட்டென உயர்ந்தார். அந்த பொறுப்பில் இதுவரை சிறப்பாகச் செயல்பட்டும் வருகிறார். இப்போது ஜாக் டார்ஸிக்கு பிறகு ட்விட்டரை வழிநடத்தப்போவதும் அவர்தான். இதுகுறித்து பராக் அக்ரவால் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது;

சமீப காலத்தில் ட்விட்டர் நிறுவனத்தையும் அதன் தேவைகளையும் சரியான திசையில் செலுத்தும் ஒவ்வொரு முக்கியமான முடிவெடுக்க பின்னாலும் பராக் இருந்துள்ளார்.

 ஆர்வம் ,பகுத்தறிவு, படைப்பாற்றல், சுய விழிப்புணர்வு மற்றும் முழு அர்ப்பணிப்புடன் தொழில்நுட்பத்தின் பிரிவை வழிநடத்தினார்.

 தலைமை செயல் அதிகாரியாகவும் அதையே செய்வார் என அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் சிறந்த டெக் நிறுவனங்களின் சிஇஓ பதவியில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டு Google சுந்தர் பிச்சை, Microsoft சத்தியநாதெள்ளா, IBM அரவிந்த் கிருஷ்ணா, Adobe சாந்தனு நாரயேன்,VMWare ரகு ரகுராம் வரிசையில் தற்போது டுவிட்டரில் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் பராக் அகர்வால்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn