திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் புதிய வகை கோவிட் வைரஸ் பரிசோதனை

திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் புதிய வகை கோவிட் வைரஸ் பரிசோதனை

திருச்சி விமான நிலையத்திற்கு நாளொன்றுக்கு 12 லிருந்து 14 வெளிநாட்டு விமானங்கள் வருகிறது. மிகவும் முக்கியமாக சிங்கப்பூரில் இருந்து வரக்கூடிய விமானத்தை பயணம் செய்யும் பயணிகளை புதிய வகை வைரஸ் (ஒமைக்ரான்) பரிசோதனை (rtpcr) செய்யப்படுகிறது. 

இன்று காலை வந்த சிங்கப்பூரிலிருந்த விமானங்கள் (ஏர்இந்தியா,இண்டிகோ) (114,168) மொத்தம் 282 பயணிகள் பரிசோதனைக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு 4 மணி நேரத்திற்க்குள் முடிவுகள் தெரியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் .

சுகாதாரத்துறை மருத்துவர்கள் உள்ளிட்ட 30 பேர் திருச்சியில் விமான நிலையத்தில் ஆர்டிபிசி ஆர் பரிசோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கேயே 2 ஆய்வுக் கூடமும் செயல்பட்டு வருகிறது.

இதனால் திருச்சி விமானநிலையத்திற்கு பயணிகளை வரவேற்க வரும் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது .மேலும் கூட்டமும் அதிகரித்து ஒரே சமயத்தில் ஏராளமானோர் கூடி வருகின்றனர்.ஆகவே சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்க்கு வரும் பயணிகளை வரவேற்க வருபவர்கள்  நான்கு மணி நேரம் தாமதமாக வர வேண்டும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn