திருச்சி அருகே ஒரு வாரகாலமாக மின்சாரமின்றி தவிக்கும் விவசாயிகள் தினமும் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத மின்வாரியம்
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பட்டூர் கிராமத்தில் கடந்த வாரம் பலத்த காற்று அடித்து தென்னை மரம் மின்கம்பம் மீது விழுந்து சாய்ந்து விட்டது .உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு மின் இணைப்பும் கொடுக்கப்படவில்லை மின்சார கம்பமும் சரி செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை (12.06.2021)முதல் விவசாய நிலத்துக்கு பயன்படக்கூடிய மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 5 ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து கொண்டிருக்கிறது என விவசாயி தர்மராஜன் கூறுகிறார்.தான் 2 ஏக்கர் நிலத்தில் கத்தரி செடி பயிரிட்டு உள்ளேன். விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு வார காலமாக தினமும் சிறுகனூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு நடந்துசென்று புகார் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மின் கம்பத்தை நடுவதற்கு நீங்களே செலவு செய்ய வேண்டும் எனவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கும் இசைந்து உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களை காப்பாற்ற மின்னிணைப்பு விரைவாக கொடுக்க வேண்டுமெனவும் தொடர்ந்து புகார் மனுவை மட்டும் அளித்து வண்ணமாகவே உள்ளளோம். ஒரு வார காலமாக அப்பகுதியின் விவசாய நிலங்களுக்கான மின்சாரம் வழங்கப்படவில்லை மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF