இந்தியாவிலேய அனைத்து வசதிகளையும் கொண்டது திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

இந்தியாவிலேய அனைத்து வசதிகளையும் கொண்டது திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில், பஞ்சப்பூரில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமையவுள்ள இடத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.. திருச்சியில் அமைய உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட்  வரைபடத்தை முதல்வரிடம் காட்டிவிட்டோம். இடத்தை, அரசின் நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்துள்ளார்.

விரைவில் டெண்டர் விட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. ஒரு ஆண்டுக்குள் பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் அமையவுள்ள இடத்தில், 37 கோடி ரூபாய் செலவில், 8 அடி உயரத்துக்கு மண் கொட்டி சமப்படுத்துவதற்கான பணிகள் துவங்கியுள்ளது.

முதல்கட்டமாக, 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, மார்க்கெட் வணிக வளாகம், சாலை வசதி, லாரி ஸ்டாண்ட் போன்றவற்றுக்கு தனியாக நிதி ஒதுக்கி பணிகள் செய்யப்படும். மொத்தம் 48 ஏக்கரில் பஸ் ஸ்டாண்ட், 44 ஏக்கரில் டெர்மினல்,  22 ஏக்கரில் மார்க்கெட் வளாகம் அமைக்கப்பட உள்ளது .

பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், மொத்தம் 280 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் இடம் முழுக்க முழுக்க மாநகராட்சிக்கு சொந்தமானது என்பதால், மாநகராட்சியின் வருவாய் பெருக்கும் விதத்தில் அமைய உள்ளது. மேலும், புது பஸ் ஸ்டாண்ட் அமைப்பதன் மூலம் சுற்றியுள்ள இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO