மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அரசு விழா- நலத்திட்ட உதவி வழங்கிய திமுக நிர்வாகி- பொதுமக்கள் அதிர்ச்சி

திருச்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக நிர்வாகி தர்மன் ராஜேந்திரன் பொதுமக்கள் அதிர்ச்சி
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாப்பட்டி, முத்தையம் பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாற்றங்கால் உற்பத்தி செய்யும் இடம் மற்றும் நூலகம், நியாய விலை கடை ஆகியவைகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார், தொடர்ந்து துறையூர் தனியார் மண்டபத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில்
மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார், தொடர்ந்து நத்தம் பட்டா, இலவச வீட்டு மனை பட்டா, கலைஞரின் கனவு இல்லம், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பல்வேறு நலத்திட்டங்களில் 333 பயனாளிகளுக்கு ரூ 2- கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான ஆணைகளை வழங்கினார்,
விழாவில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர், முசிறி கோட்டாட்சியர், துறையூர் வட்டாட்சியர் போன்ற அரசு அதிகாரிகள் அரசு விழாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் தலையீடு உள்ளதை பொதுமக்கள் சுட்டிக் காட்டினார்.
மேலும் திருச்சி மாவட்ட முன்னாள் ஊராட்சி மன்ற குழு தலைவர் திமுக நிர்வாகியான தர்மன் ராஜேந்திரன் அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கியது துறையூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision