அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வருகின்ற ஜூலை மாதம் 9ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இன்று நாடு தழுவிய அளவில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல் பி எஃப் , சிஐடியு , ஏ ஐ டி யு சி , ஐ என் டி யு சி , எச் எம் எஸ் , எல் எல் எப் , யு டி யு சி , ஏ ஐ சி சி டி யு ஆகிய சங்கங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களை கார்ப்பரேட் முதலாளிகளின் கொத்தடிமையாக்கும் தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை திரும்ப பெற வேண்டும். 

பெட்ரோல், டீசல், கேஸ், உணவு, மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்.

 மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

 ஆட்டோ, கட்டுமானம், தரைக்கடை, சுமைப்பணி, அமைப்புசாரா ஓட்டுநர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதி ஆணையத்தை உருவாக்கி தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும்.

 கல்வியை வியாபாரமாக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

மின்சாரம், போக்குவரத்து, துறைமுகம், ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையமாகக் கூடாது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision