புதிய புறநகர் பேருந்து சேவைகளை தொடங்கி வைத்த மேயர்

புதிய புறநகர் பேருந்து சேவைகளை தொடங்கி வைத்த மேயர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்., திருச்சி மண்டலம் மூலம் K.N.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் கூடுதல் பேருந்து வசதி பெறும் வகையில் புதிய புறநகரப் பேருந்து இயக்கத்தினை மேயர் மு.அன்பழகன் கொடியசைத்து துவக்கிவைத்தார். இப்புதிய புறநகரப் பேருந்தின் மூலம் கீழ்கண்டுள்ளவாறு பொதுமக்கள் பயன்பெறுகின்றனர்.

1) சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தில்லைநகர், அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வழியாக மணப்பாறை செல்ல கூடுதல் பேருந்து வசதி பெறுகின்றனர். ராம்ஜிநகர், பிராட்டியூர், கருமண்டபம் போன்ற திருச்சி மேற்கு தொகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், கி.ஆ.பெ. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தில்லைநகர் பகுதிகளுக்கு செல்லவும் புதிதாக நேரடி பேருந்து வசதி பெறுகின்றனர்.

2) மருதாண்டாகுறிச்சி, பிரகாஷ்நகர், அரவானூர், மேலபாண்டமங்கலம், லிங்கநகர் போன்ற திருச்சி மேற்கு தொகுதி பொதுமக்கள் காலை மற்றும் மாலை கூட்ட நெரிசல் (Peak hours) அதிகமுள்ள நேரங்களில் குறுநடை இயக்கப்படுவதால் கூடுதலாக பேருந்து வசதி பெறுகின்றனர்.

3) ரெட்டைவாய்க்கால், உய்யகொண்டான் திருமலை, ஸ்ரீனிவாசநகர், குமரன்நகர் போன்ற திருச்சி மேற்கு தொகுதி பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் குறுநடை இயக்கப்படுவதால் கூடுதலாக பேருந்து வசதி பெறுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் K.N.அருண்நேரு, திருச்சி மண்டல பொது மேலாளர் S.சக்திவேல், கழக அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்., திருச்சி மண்டலம் மூலம் K.N.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி இயக்கப்படும் புதிய புறநகரப் பேருந்தின் வழித்தட விபரம்.

1) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மணப்பாறை (வழி) தில்லைநகர், மத்திய பேருந்து நிலையம், கேர் கல்லூரி, வேளாண்மை கல்லூரி - தினசரி 3 நடைகள்.

2) மணப்பாறை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் (வழி) வேளாண்மை கல்லூரி, கேர் கல்லூரி, மத்திய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தில்லைநகர் தினசரி 3 நடைகள்.

3) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் -மருதாண்டாகுறிச்சி (வழி) மேலபாண்டமங்கலம், அரவானூர் -தினசரி 4 நடைகள்.

4) மருதாண்டாகுறிச்சி -திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் (வழி) அரவானூர், மேலபாண்டமங்கலம் - தினசரி 4 நடைகள்.

5) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வாசன்நகர் (வழி) தில்லைநகர், உய்யகொண்டான் திருமலை - தினசரி நடைகள். 3

6) வாசன்நகர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் (வழி) உய்யகொண்டான் திருமலை, தில்லைநகர் - தினசரி நடைகள். 3

7) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் - வேளாண்மை பல்கலைக் கழகம் (வழி) கேர் கல்லூரி, சட்டப் பல்கலைக் கழகம், பாரதிதாசன் உறுப்பு கல்லூரி- தினசரி 2 நடைகள்.

8) வேளாண்மை பல்கலைக் கழகம் - திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் (வழி) பாரதிதாசன் உறுப்பு கல்லூரி, சட்டப் பல்கலைக் கழகம், கே ர் கல்லூரி - தினசரி 2 நடைகள்.