தடுப்பூசிகளுக்கு காப்புரிமை கூடாது என உலகின் 33 கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டறிக்கை

தடுப்பூசிகளுக்கு காப்புரிமை கூடாது என உலகின் 33 கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டறிக்கை

உலகில் உள்ள 33 கம்யூனிஸ்ட் கட்சிகள் கொரோனா  வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பவர்களுக்கு தனியே கண்டுபிடிப்பு உரிமை(Patent rights) அளிக்கக்கூடாது என்று இந்தியாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட உலகில் உள்ள 33 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் கையெழுத்திட்டு கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. 

கோவிட் 19  சம்பந்தப்பட்ட அனைத்து தடுப்பூசிகள் மீதும் அறிவு சொத்துரிமைகள் (Intellectual property)மற்றும் கண்டுபிடிப்பு உரிமைகள் என்ற பெயர்களில்  உற்பத்தியை முடக்குவது தடை செய்திட வேண்டும்.
 இது தொடர்பாக அனைத்து நாடுகளும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்திட வேண்டும், பொது துறைகளின் கீழ் தடுப்பூசிகளுக்கான உற்பத்தி வினியோகம் மற்றும் அமலாக்கம் தொடர வேண்டும்.


 பொது சுகாதார அமைப்பு முறை உடனடியாக உருவாக்கப்படவேண்டும் வலுப்படுத்தப்பட வேண்டும் தடுப்பூசிகளின் ஊக வணிகத்தை கண்டித்தல், தடுப்பூசிகள் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படைத்தன்மையுடன் சர்வதேச அறிவியல் அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும், சர்வதேச ஒருமைப்பாட்டுடன் ஒத்துழைப்புடனும் இது தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், இதில் போட்டி மனப்பான்மை கூடாது தடுப்பூசிகள் எதிரான பிரச்சாரம் மற்றும் அறிவியலற்ற  தகவல்கள் தீர்க்கமான முறையில் தடை செய்யப்பட வேண்டும்.

மக்கள் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும், இதனை பயன்படுத்திக் கொண்டு ஏகபோகங்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவது தடுத்தல் போன்றவைகளை வலியுறுத்தி  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 கண்டுபிடிப்பு உரிமை அல்லது அறிவுச் சொத்துரிமை என்பவை தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்காது  மாறாக அவை மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதை  மந்தப்படுத்தும் ஆனால், நாம் பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையையும் ஏகபோக முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் மற்றும் அவற்றுக்கு போட்டா போட்டி ஏற்படும் விதத்தில் விட்டுவிடக்கூடாது.

இன்றைய தினம் தடுப்பூசிகளை ஒரு சில நாடுகள் மட்டும் தான் உற்பத்தி செய்ய முடியும் மிகவும் அதிகாரம் படைத்த ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் தேவைக்கு மேலாகவே அவற்றை இறக்குமதி செய்யக் கூடியது அதே சமயத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நாடுகள் தங்கள் மக்கள் தொகை முழுவதற்கும் தேவைப்படும் அளவிற்கு இறக்குமதி செய்வதற்கு இயலாத நிலையில் இருக்கின்றன.

இவ்வாறு ஒரு நிச்சயமற்ற எதிர்காலம் அவர்கள் எதிர்நோக்கி இருக்கும் பொழுது குடிமக்களின் சாவை தடுக்க முடியும் என்று தெரிந்தும் கூட அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாதவை ஒரு ஆபத்தான போக்காகும்.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக வலுவான சிகிச்சை மேற்கொள்ளப்படும் வரை அனைவருக்கும் தடுப்பூசிகள் மற்றும் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடும்வரும் வரை வைரஸ் தொற்று பரவலாகக் தொடரும்.

அதுவரையிலும் நோயற்ற தன்மையுடனும் மற்றும் மரணங்களுடனும்  இணைந்து வாழ்வது தொடரும் எனவே தொழிலாளர்கள் வர்க்க மற்றும் அனைத்து மக்களின் பொதுவாக அடிப்படையில் தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பு மற்றும் சிகிச்சை அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அக்கூட்டறிக்கையில் வெளியிட்டுள்ளனர் அதுமட்டுமின்றி கோரிக்கையை  WHO பரிசிலைனை செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF