நெல் மூட்டைகளை வெளியே தூக்கி எரிந்து அராஜகத்தில் ஈடுபட்ட வார்டு கவுன்சிலரின் கணவர்

நெல் மூட்டைகளை வெளியே தூக்கி எரிந்து அராஜகத்தில் ஈடுபட்ட வார்டு கவுன்சிலரின் கணவர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குமரக்குடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். கூலி வேலை செய்து வரும் இவர் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

மழைக்காலங்களில் இவரின் வீட்டில் மழை நீர் உள்ளே வரும் என்பதால் இவர் அறுவடை காலத்தில்  கூலி வேலை செய்து சேர்த்து வைத்த நெல் மூட்டைகளை ஊர் பொதுமக்கள் அனுதியுடன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு சொந்தமான டிவி அறையில் வைத்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலரின் கணவர் செல்வம் அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக 50 சிமெண்ட் மூட்டைகளை கொண்டு வந்த அவர் அதே டிவி அறையில் இறக்கி வைத்து கூலி தொழிலாளியின் நெல் மூட்டைகளை வெளியே வீசி எரிந்தார்.

தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த நெல் மூட்டைகளை வெளியே எரிந்ததில் ஆதங்கமடைந்த கூலி தொழிலாளி தர்மலிங்கம்  கவுன்சிலரின் கணவர் செல்வத்திடம் கேட்டதற்கு தகாத வார்த்தையால் திட்டியும், மிரட்டல் விடுத்துள்ளார்.

அதேபோன்று மணல் லோடு ஏற்றி வந்த போது அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மருதமுத்துவின் வீட்டை லாரியை திருப்பும்போது அடுப்பு மற்றும் சுவரை சேதப்படுத்தி உள்ளார். அது குறித்து கேட்டதற்கும் கவுன்சிலரின் கணவர் செல்வம் அடாவடியாக நடந்து கொண்டுள்ளார்.

மேலும் எனக்கு எல்லா அதிகாரமும் உள்ளது உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்கிற தோரணையில் பேசி வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO