திருச்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300 கிலோ போலி சாக்லேட்டுகள் பறிமுதல்
பொது மக்கள் புகாரையடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி பெரிய கம்மாள தெருவில் உள்ள 2 கடைகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் 2 கடைகளில் குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்டில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, மற்றும் தயாரிப்பாளர் முகவரி இல்லாமல் இருந்த சுமார் 300 கிலோ சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யபட்டன. அதில் நான்கு சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.
இதுபோன்று குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் தயாரிப்பாளர் முழு முகவரி இல்லாமல் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர், டாக்டர் R. ரமேஷ்பாபு கூறினார்.
உணவு கலப்பட புகார் எண் :
99 44 95 95 95 / 95 85 95 95 95
மாநில புகார் எண் :
9444042322
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn