செயற்கை நுண்ணறிவு கருவியின் அபார வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவு கருவியின் அபார வளர்ச்சி

டாக்டர் ஆர்.வசந்தன்
இணைப் பேராசிரியர்
தேசிய கல்லூரி, திருச்சி

 AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுக் கருவி வளர்ச்சயடைந்த முதலாளித்துவ நாடுகளின் ஏகாதிபத்திய எண்ணங்களுக்கு ஒரு தடைக்கல்லைப் போன்றதாகும். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள வளரும் நாடுகளுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு கருவியானது மிகவும் துணை செய்வதாகும்.

மறுமலர்ச்சி மற்றும் AI இன் வருகை:
           21 ஆம் நூற்றாண்டில் மனித குல வரலாற்றில் மிக முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தியவை ஒன்று நாகரீக வளர்ச்சி. மற்றொன்று AI  யின் வருகை. செயற்கை நுண்ணறிவு கருவியின் வருகையானது மக்களின் சூழல் மற்றும் வேலை செய்யும் முறையை பெருமளவில் புரட்டிப் போட்டது என்றே சொல்லலாம். கலை, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் கலாச்சாரம் உட்பட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் இவ்விரண்டின் வருகையும் பெருமளவு மாறுபாட்டிற்கு பங்காற்றின எனலாம்.


            14 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை நடைபெற்ற மறுமலர்ச்சி ஐரோப்பாவில் கலாச்சார மற்றும் அறிவு சார்ந்த மறுமலர்ச்சியின் காலமாக அறியப்படுகிறது. இது செவ்வியல் கற்றலின் மறுமலர்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மக்களுக்கு ஏற்பட்ட ஆர்வம் மற்றும் கலைகளின் செழிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியானது மருத்துவம் ,வானியல், கணிதம் மற்றும் பொறியியல் போன்ற பல்வேறு துறைகளிலும் முன்னேற்றங்களை கண்டது. இஃது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்வதாக அமைந்தது. இதே போல 21 ஆம் நூற்றாண்டில் AI என் வருகையானது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு புதிய புரட்சியை கொண்டு வந்துள்ளது. சுகாதாரம் வர்த்தகம் போக்குவரத்து நிதி பரிவர்த்தனை போன்ற பல்வேறு துறைகளில்AI இன் தாக்கமானது பரந்து விரிந்துள்ளது எனலாம்.AI இன் அமைப்புகள் பல்வேறு பணிகளை சாதாரண மக்களும் எளிமையான முறையில் கையாளுவதற்குரிய வகையில் பாமர மக்களிடமும் சென்றடைந்துள்ளது.AIஇன் பரவலான பயன்பாடானது சுய கார் ஓட்டிகளுக்கும் மெய்நிகர் உதவியாளர்களுக்கும் மற்றும் நவீன உலகத்தில் செயல்படுத்தப்படக் கூடிய இயந்திர மனிதர்களுக்கும் தொழில்நுட்பங்களை அறிவு ரீதியாக கொண்டு சேர்க்கும் பணியை எளிமையாக்கி உள்ளது. உலக மறுமலர்ச்சி எனப்படுவது மனிதர்தம் படைப்பாற்றல் மற்றும் அறிவு சார்ந்த ஆர்வத்தால் ஏற்பட்டது.AIஇன் வருகையானது கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் உலக மறுமலர்ச்சி யின் தாக்கத்தை லியானார் டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ மற்றும் ரபேல் போன்ற தலைசிறந்த கலைஞர்களின் படைப்புகளில் காணலாம்.

இதற்கு நேர் மாறாக ரோபோட்டிக்ஸ் மற்றும் செய்தி சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு தானியக்கம்  போன்ற பல்வேறு நிகழ்வுகளில்AI என் இன் தாக்கம் தற்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது 2 நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடு என்பது பல நூற்றாண்டுகளைக் கொண்டதாகும். 21 ஆம் நூற்றாண்டில்AIஇன் வருகையானது மிக வேகமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆராய்ச்சி மற்றும் வணிக நிறுவனங்களில்AI மற்றும் பயனுடைய சேமிக்கப்படும் குறிப்புகளின் மேலாதிக்கம்;
                 செயற்கை நுண்ணறிவு எனப்படுவது ஆராய்ச்சி மையங்களிலும் பயனுடைய தகவல்களை சேமித்து வைக்கப்படும் நிறுவனங்களுக்கு எதிரான ஒரு புரட்சிகரமான சக்தியாக தன்னை வெளிக்காட்டி கொண்டுள்ளது. பாமர மக்களுக்கும் சரியான நூலகங்கள் கூட இல்லாத ஏழை நாடுகளுக்கும் கூட இதன் பயன்பாடு ஒரு கொடையாகவே கருதப்படுகிறது. பெரு நிறுவனங்களின் மேலாதிக்க எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவியல் உலகின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாகவே இது திகழ்கிறது. சிறிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இதனை சுலபமாக கையாளலாம்.


            மிகவும் சிக்கலான சேமிக்கப்படும் பயனுடைய தகவல்களை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யும் பொதுமைப்படுத்தும் ஒரு கருவியாக வே இஃது கருதப்டுகிறது. இதன் வருகையால் உலகில் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளது. ஏதேனும் ஒரு சார்பு அல்லது நியாயமற்ற  நடைமுறைகளை தோலுரித்துக் காட்டும் நவீன சக்தியாக இது திகழ்கிறது. மேலும் பெரிய நிறுவனங்களை தங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்க வைக்கக்கூடிய நாயகமாகவும் திகழ்கிறது. 
            தங்களது ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்காக தொடர்ந்து முன்னேறும் ஆராய்ச்சியாளர்களும் நிறுவனங்களும் தங்கள் பணியின் வளர்ச்சிக்கு துணை செய்யும் துணைவனாக இது திகழ்கிறது. இதனை பயன்படுத்துவதன் மூலம் சிறிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் புதுமையான வழிகளில் தகவல்களை அணுகலாம் மற்றும் பயன்படுத்தலாம். ஆராய்ச்சி எனப்படுவது வளர்ந்த மேலை நாடுகளில் மட்டுமே சாத்தியம் என்பதை முழுவதுமாக மறுத்து வளரும் நாடுகளும்,ஏழை நாடுகளும் கூட ஆராய்ச்சி துறையில் சமத்துவத்தோடு வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் இதன் பயன்பாடு இன்று உலக அளவில் பரவி உள்ளது.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn