தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம் புதிய வசதிகளுடன் துவங்கி வைப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம் புதிய வசதிகளுடன் துவங்கி வைப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கான பல்வேறு புதிய தகவல்கள் மற்றும் வசதிகளுடன் புதிய இணையதளம் தேர்வாணையத் தலைவர் கா. பாலச்சந்திரன் (ஓய்வு) அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இதற்கு முன்னர்  2012லிருந்து 4.8 கோடிக்கும் மேற்பட்ட நபர்களால் பார்வையிடப்பட்ட www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம், எட்டு வருட காலத்திற்கு பிறகு தற்போது புதுப்பொலிவுடன் மாற்றிய வடிவமைக்கப்பட்டு ,அதே www.tnpsc.gov.in  முகவரியில் கீழ்க்கண்ட சிறப்பம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

சிறப்பம்சங்கள்:

~ தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனைத்து தகவல்கள்.

~ மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ள இந்திய அரசு இணையதளங்களுக்கான நெறிமுறைகளை (Guidelines for Indian Government Websites) பின்பற்றி இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

~ விண்ணப்பதாரர்களுக்கு தேவையான எந்த ஒரு தேர்வு குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் தேர்வு தகவல் பலகை ( EXAM DASHBOARD) என்ற பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

~ பார்வை குறைபாடு ( Colour Blindness, Low Vision and v
Visually Impaired) உள்ளவர்களும் தமக்கு தேவையான விவரங்களை தாங்களே எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

~ இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பதாரர்கள் பின்னூட்டம் (Feedback) அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது..