வில்வித்தை போட்டியில் அசத்தும் திருச்சி மாணவன்

வில்வித்தை போட்டியில் அசத்தும் திருச்சி மாணவன்

பீகாரில் கடந்த 4-ந்தேதி நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி காமாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த மாணவன் மிதுன் ராஜதுரை வில்வித்தை போட்டிகளில் கலப்பு பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். திருச்சி திரும்பிய அவருக்கு ராக்போர்ட் ஆர்ச்சரி அகாடமி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

வில் வித்தையில் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் பயிற்சி பெற்று வருகிறார் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் மிதுன் ..

தன்னுடைய வெற்றி பயணம் குறித்து பகிர்ந்து கொள்கையில்,

என்னுடைய மூன்று வயதிலிருந்தே எனக்கு வில்வித்தை மீது ஆர்வம் என்று என் பெற்றோர்கள் கூறுவர் சிறுவயதிலிருந்தே எனக்கு வில்வித்தை மிகவும் பிடிக்கும்.மகாபாரதத்தை பார்த்து எனக்கு வில்வித்தை ஆர்வம் ஏற்பட்டது ..

அப்பொழுதிலிருந்து வில் வித்தையில் பயிற்சியில் இறங்கினேன் என் தந்தை தான் என்னுடைய பயிற்சியாளர் ..

தினமும் காலையிலும், மாலையிலும் பயிற்சியை தவறவிடுவது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் பயிற்சிக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். திருச்சி காமாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறேன் கல்வியைப் போல் விளையாட்டிலும் சாதிக்க வேண்டும் என்று என் பள்ளி எனக்கு அதிக ஊக்கத்தை அளித்து பயிற்சிக்கு அனுமதி அளித்தனர்.

மூன்று வயதில் இருந்து பயிற்சி பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு வரும் நான் மாநில தேசிய அளவில் பல பரிசுகளையும் வென்றுள்ளேன் ..

 வெற்றி என்பது எளிதில் கிடைத்து விடாது விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்று என் தந்தையும் பயிற்சியாளருமான ராஜதுரை எப்போதும் கூறுவார் அவர் அளித்த ஊக்கமே என்னை அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி பெற செய்தது உலக அளவில் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்  என்றார்.