அம்மா மாஸ்க் போடுங்க ... தம்பி மாஸ்க் போடுங்க- விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருச்சி போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன்

அம்மா மாஸ்க் போடுங்க ... தம்பி மாஸ்க் போடுங்க- விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருச்சி போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன்

கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மக்கள் விடுபெற்றாலும், மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என்கிற மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை பொதுமக்களுக்கு மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அம்மா மாஸ்க் போடுங்க ... தம்பி மாஸ்க் போடுங்கள் என்று திருச்சியில் உள்ள ஒவ்வொரு சிக்னல்களிலும் கொரோனோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன். இருசக்கர வாகனங்களில் முககவசங்களை அணியாமல் வருபவர்களுக்கு இலவச முககவசங்களை வழங்குவதோடு நாள்தோறும் 10க்கும் அதிகமான பேருந்துகளில் ஏறி தன் சக போக்குவரத்து காவலர்களின் உதவியோடு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

திருச்சி மாநகர் முழுவதும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, தலைக்கவசம் அணியாதவர்கள் மீது அபதாரம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்து காவலர்கள், கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் முகம் சுளிக்காமல் தினந்தோறும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி வரும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn