தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் காரிப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும்  மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்த பயிர்கள் இயற்கை இடாபாடுகளினால் பாதிப்பு ஏற்படும் பொழுது, அப்பாதிப்பினால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்வதற்கும் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் பயிர்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்துள்ளவர்கள் 2021 ஆகஸ்ட் 31 மற்றும் வாழை, மரவள்ளி, மஞ்சள் சாகுபடி செய்துள்ளவர்கள் 2021 செப்டம்பர் 15 வரைபயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர் காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு வாழை பயிருக்கு ரூ.3238ம், மஞ்சள்
பயிருக்கு ரூ.3455 மரவள்ளி பயிருக்கு ரூ.1528, வெங்காயப் பயிருக்குரூ.1978, அரசு பொது சேனை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகையினை செலுத்தி பதிவு செய்திட வேண்டும்.

இப்பயிர்க் காப்பீடு பதிவு செய்திட நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயர் மற்றும் விலாசம். நில பரப்பு. சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn