முடங்கிப்போன முதல்வரின் சிறப்புப்பிரிவு !! கருணை காட்டுமா அரசு ?
தமிழகத்தில் பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகள், முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தலைமைச்செயலகத்தில் முதல்வரின் தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. நேரடியாக கோரிக்கை மனுக்களை அளிக்க முடியாதவர்கள், www.cmcell.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், இமெயில் மூலமும் முதல்வரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனுக்களை வழங்கலாம்.
அப்படி, முதல்வரின் தனிப்பிரிவில் திருவள்ளூரை சேர்ந்த கோதண்டன், தன் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். தன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, முதல்வரின் தனிப்பிரிவின் உதவிமைய ஊழியர்களுடன் கோதண்டன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிர்ச்சியளிக்கும் அந்த ஆடியோவில் இருப்பது இதுதான்...
கோதண்டன் : என் பெயரில் கோரிக்கை மனு ஒன்றை பதிவு செய்துள்ளேன்.
உதவிமைய ஊழியர் : நீங்கள் உங்கள் கோரிக்கை மனுவை பிப்ரவரி 23ம் தேதி பதிவு செய்துள்ளீர்கள்.
கோதண்டன் : எந்த ஆண்டு பதிவு செய்தது ஊழியர்: கோரிக்கை மனுவை 2021 பிப்ரவரி 23ல் பதிவு செய்துள்ளீர்கள்.
கோதண்டன் : ஏம்மா!. 2 ஆண்டுகளாக ஒரு மனுவை அரசு வைத்திருந்தால், எப்படி அரசு நடக்கிறது. மக்களை ஏமாற்றும் இந்த திட்டம் தேவையா? தயவு செய்து இந்த திட்டத்தை நிறுத்துங்கள்.
ஊழியர் : சார், உங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கோதண்டன் : எப்போதுமா நான் இறந்த பிறகு நடவடிக்கை எடுப்பீர்களா?
ஊழியர் : உங்கள் கோரிக்கை, அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்படும்.
கோதண்டன் : இதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் இதற்கு, கம்ப்யூட்டர் ஆடியோவை பயன்படுத்தலாம் . கோரிக்கையை அதிகாரிகளிடம் கொண்டு செல்லுங்கள். இப்படியாக முடிகிறது அந்த ஆடியோ தேர்தல் பிரச்சார நேரத்தில் பெட்டி வைத்தார் சாவியை பூட்டி எடுத்துக்கொண்டார் அந்த சாவி எங்கே என்றே தெரியவில்லை, அதன்பின் இப்படி குறை தெரிவிக்கலாம் என்று சொன்னார் இதுவும் இப்படி பேசு பொருளாகிவிட்டது. ஒரு வாரத்திற்கு முன் உள்ளாட்சி மணி திட்டம், நெட்டிசன்கள் எத்தனை மணி திருட்டு போகப்போகுதோனு மீம்ஸ் போட்டு கலாய்க்காமல் இருந்தால் சரி சரி.