அரசு மருத்துவர் மீது தாக்குதல் - 3 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு

அரசு மருத்துவர் மீது தாக்குதல் - 3 பேர் மீது 7  பிரிவுகளில் வழக்கு பதிவு

திருச்சி பெரியமிளகுபாறை பகுதியிலுள்ள இ எஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் தீரன்நகர் பகுதியை சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன் கார் பார்க்கிங் செய்யும் போது வாலிபர் ஒருவரிடம் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு சென்ற மருத்துவர் கார்த்திகேயனை விரட்டி சென்று ஒரு கும்பல் தாக்கியது.

இதில் மருத்துவர் கார்த்திகேயனின் காது கிழிந்து, உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து மருத்துவர் கார்த்திகேயன் கன்டோண்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அரசு மருத்துவரை தாக்கியதாக பொன்னகர் பகுதியைச் சேர்ந்த பிரவின் (33), பெரியமிளகுபாறை சேர்ந்த சுப்ரமணியன் (42) பெரியமிளகு பாறைச் சேர்ந்த அகீர்பாட்ஷா (50) ஆகிய 3 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த கண்டோண்மென்ட் போலீசார் மூவரையும் கைது செய்தனர். 

இந்த நிலையில் இ எஸ் ஐ மருத்துவமனை மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணிபாதுகாப்பு இல்லாத அவல நிலை தொடர்கிறது. மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் நடத்திய குண்டர்களை மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்து நடவடிக்கை எடுக்ககோரி

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் என பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று திருச்சி பெரியமிளகு பாறை பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision