பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவமுகாம் - மேயர் ஆய்வு

பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவமுகாம் - மேயர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர் வடக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சோழராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அவர்கள், நேரில் பார்வையிட்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5 வார்டு எண் : 9 உறையூர் வடக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் வார்டு எண் : 11 சோழராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்மருத்துவ முகாம்மினை மேயர் மு. அன்பழகன், மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் சதீஷ்குமார் , உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணன், மாமன்ற உறுப்பினர் விஜய ஜெயராஜ் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டார்.

மருத்துவ முகாமினை பார்வையிட்ட மேயர் பள்ளியை தூய்மையாக பராமரிக்கவும், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை கிருமி நாசினி கொண்டு வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோல மாநகராட்சி பொறியாளர்கள் வாரம் ஒரு முறை பள்ளிகளின் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்ய வேண்டும் அனைத்து பள்ளிகளிலும் உள்ள தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். முன்னதாக உறையூர் மருத்துவமனை சாலையில் உள்ள புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மேயர் அன்பழகன், கட்டுமான பணிகளையும் மருத்துவத்திற்கு தேவையான உபகரணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision