முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (15.6.2023) முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதின உறுதிமொழி அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்திய குடிமகன் / குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ் செயல்கள் வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் வெஸ்ட்ரி, RC, சேவா சங்கம் ஆகிய மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளில் மாவட்ட சமூக நல அலுவலர் மா.நிதியா, முதன்மைக் கல்வி அலுவலர் ம.சிவக்குமார், மாணவ, மாணவியர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn