முக்கொம்பில் காவிரி நீரை வரவேற்ற விவசாயிகள்

முக்கொம்பில் காவிரி நீரை வரவேற்ற விவசாயிகள்

குறுவை சாகுபடிக்காக கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீரை முதலமைச்சர் திறந்து வைத்தார். அந்த நீர் இன்று (15.06.2023) திருச்சி மாவட்டம் முக்கொம்புவிற்கு வந்தடைந்தது. அந்த நீரை வரவேற்கும் விதமாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காவிரி நீருக்கு மலர்கள், விதை நெல் மணிகளை தூவியும் வரவேற்றனர். 

பின்னர் கல்லணையிலிருந்து நாளை (16.06.2023) டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீர் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்கலுக்கு பாசனத்திற்காக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைமடைக்கு காவிரி நீர் சென்று அடையும் அளவிற்கு மீதமுள்ள தூர் வாரும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். கல்லணையில் நீர் திறந்து விடுவது அரசு விழாவாக கடைபிடிப்பது போல் காவிரி, கொள்ளிடம் பிரியும் முக்கொம்பிலும் தண்ணீரை திறப்பை அரசு விழாவாக கொண்டாட விவசாயிகள் வலியுறுத்தினர். திருச்சி மாவட்டத்தில் குறுவை சாகுபடி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முசிறி, லால்குடி பகுதிகளில் மட்டுமே நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரும் பணியை அரசு அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும் எனவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision