திருச்சியில் வர்த்தக மையம் அமைக்கும் பணி குறித்து டிடிட்சியாவில்  அமைச்சர்கள் கலந்தாய்வு

திருச்சியில் வர்த்தக மையம் அமைக்கும் பணி குறித்து டிடிட்சியாவில்  அமைச்சர்கள் கலந்தாய்வு

திருச்சி பஞ்சப்பூர் அருகில் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் வர்த்தக மையம் அமைக்கும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. இதுகுறித்து திருச்சி வர்த்தக மைய தலைவர் கனகசபாபதி கூறியதாவது... திருச்சி அருகே பஞ்சப்பூரில் 9.42 ஏக்கரில் வர்த்தக மையம் அமைப்பதற்கான பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. அரசு வழங்கிய 5 கோடி மானியம் மற்றும் வர்த்தக மைய உறுப்பினர்கள் மூலம் வசூலான ரூபாய் 6 கோடி என்று மொத்தம் ரூபாய் 17 கோடியில் வர்த்தக மையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2500 பேர் அமரும் வசதியுடன் கருத்தரங்கம் மற்றும் 250 ஸ்டார்களுடன் வர்த்தக கண்காட்சி நடத்த வசதியாக பெரிய அரங்கம்  அமைக்கப்படுகிறது. கோவை கொடிசியாவுக்கு வழங்கப்பட்ட 40 ஏக்கர் சென்னை வர்த்தக மையத்திற்கு வழங்கப்பட்ட 30 ஏக்கர் போல் திருச்சிக்கும் 25 ஏக்கர் இடம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மையத்திற்கு அருகில் விமான நிலையம், ரயில்வே நிலையம், பஸ் நிலையம், போன்ற போக்குவரத்து வசதிகள் இருப்பதால் திருச்சியில் வர்த்தக மையம்  அமைந்தால் திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பல வர்த்தக நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

மேலும் இத்திட்டம் குறித்த கலந்தாய்வு நேற்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், முன்னிலையில்  நடைபெற்றது. திருச்சி சிட்கோ டிடிட்சியா கூட்டரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இதில் புதிதாக துவங்க இருக்கும் தொழில்களுக்காக 10 தொழில் முனைவோருக்கு ரூ.20 லட்சத்து 20 ஆயிரத்து 240க்கான மான்யத் தொகையை  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்  நேரு, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

இக்கூட்டத்தில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் கலந்தாய்வு மேறகொண்டு அவர்கள் செய்து வரும் தொழில்கள், அரசால் வழங்கப்படும் திட்ட உதவிகள், தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொழில்கள் மேம்படுத்துவது தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தனர். முன்னதாக, கொரோனா நிவாரண நிதியாக ரூ.2.25 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்களிடம் டிடிட்சியா நிர்வாகிகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய், குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான  சவுந்தர பாண்டின், ஸ்டாலின் குமார், தியாகராஜன், பழனியாண்டி. இனிகோ இருதயராஜ், கதிரவன், அப்துல்சமது, டிஆர்ஓ பழனிகுமார். சிட்கோ பொது மேலாளர் பேபி. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன், டிடிட்சியா தலைவர் இளங்கோ, செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW