இரண்டாம் நிலைக் காவலர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை 26.07.2021 திருச்சியில் சான்றிதழ் மற்றும் உடற்தகுதி தேர்வு

இரண்டாம் நிலைக் காவலர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை 26.07.2021 திருச்சியில் சான்றிதழ் மற்றும் உடற்தகுதி தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு 
கடந்த 13.12.2020 அன்று நடைபெற்றது.

இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு (மொத்தம் - 3210 நபர்கள், ஆண்கள் - 2204, பெண்கள் - 1005 மற்றும் திருநங்கை - 1) அடுத்தகட்டமாக 26.07.2021 -ந்தேதி முதல் 05.08.2021-ந்தேதி வரை திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட 
ஆயுதப்படை மைதானத்தில் அசல் சான்றிதழ் சரிபார்த்தல்.

உடற்கூறு அளத்தல் (ஆண்களுக்கு உயரம் அளத்தல், மார்பளவு அளத்தல், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உயரம் அளத்தல்) உடற்தகுதி தேர்வு (ஆண்களுக்கு 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும், பெண்கள் மற்றும் திருநங்கைகள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஒடி முடிக்க வேண்டும்) தேர்வுகள் நடைபெற உள்ளது. 

இத்தேர்வானது தமிழ்நாடு சீருடை பணியாளர் துணைக்குழுவின் தலைவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பா.மூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வு மேன்பட்ட ஆய்வு அதிகாரியாகிய திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், மேற்பார்வையிடப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW