Inymart அகாடமியில் பவர்பிஐ பயிற்சி தொடக்கம்
இன்றைய காலக்கட்டத்தில், தகவல் தொழில்நுட்ப துறை சேவைத் துறையாக பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அடித்தட்டு மக்களையும் தகவல் தொலை தொடர்புகள் சேர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு உலக அரங்கில் இந்தியா செயல்படுகிறது. அதன் விளைவாய் நம் நாட்டில் சிறு கிராமங்களுக்கு கூட இன்று இணையதள வசதியும் மொபைல்போன் வசதியும் சென்றடைந்திருக்கிறது என்பதை கண்முன் பார்த்து வருகிறோம்.
ஒரு காலத்தில் சிறிய துறையாக இருந்த தகவல் தொழிநுட்பம். இன்றோ, விவசாயம், வணிகம் என அது நுழையாத துறைகளே இல்லை. தொழிநுட்ப வளர்ச்சியால் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற பல துறைகள் உருவாகியுள்ளன. அவற்றால் பல வேலைவாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனினும், வேலையில்லா திண்டாட்டம் தொடர்கதையாகவே உள்ளது. காரணம் சமுதாயத்தில் அந்தந்த துறைகள் பற்றிய சரியான வழிகாட்டுதல் இல்லை.
சரியான தகவல்களை பெற்று ஒவ்வொரு துறையை பற்றியும் அறிந்து அதற்கேற்ப அறிவை வளர்த்துக்கொண்டால் வேலை பெறுவது சுலபம். இவ்வாறு பல்வேறு துறைகளில் இன்று வளர்ந்து வரும் இரண்டு முக்கிய துறைகளை பற்றி காண்போம். உணவு , உடை, இருப்பிடம் என மூன்றாக இருந்த மனிதனின் தேவை என்று அலைபேசியோடு சேர்ந்து நான்காக மாறியதோ அன்று தொடங்கியது தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங், கம்ப்யூட்டர், அலைபேசி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களைக் கொண்டு இணையதளத்தின் வாயிலாக பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதே (அதாவது மார்க்கெட்டிங் செய்வதே) டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும்.
பாரம்பரிய சந்தைப்படுத்துதல் முறைகளான பத்திரிக்கை, விளம்பரம் நேரடி விற்பனை போன்றவற்றோடு ஒப்பிட்டு பார்க்கும்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் எளிமையானது, துல்லியமானது மற்றும் சிக்கனமானதும் கூட.
1990-களில் சிறு புள்ளியாகத் தோன்றிய டிஜிட்டல் மார்க்கெட்டிங் இன்று SEM, SEO, PPC என பல துறைகளை உள்ளடக்கிய மாபெரும் துறையாக உருமாறியுள்ளது. பல நாடுகளில் வணிகம் செய்யும் பெரிய நிறுவனங்களின் உயிர் நாடியே டிஜிட்டல் மார்க்கெட்டிங் தான். பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மற்றும் பிற கல்வி நிறுவனங்களிலும் UG, PG, diplomo என பல கல்வி நிலைகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்பிக்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றவர்களின் தேவை என்பது சிறு தொழில் வைத்திருப்பவர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பரவிக்கிடக்கிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர் “DIGITAL MARKETER” என தனித்துவமாக அழைக்கப்படுகின்றனர். சிறிய அளவிலான தொழில்துறைகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய ஒன்று அல்லது இரண்டு DIGITAL MARKETERS போதுமானவர்களாக இருப்பர். ஆனால் பெரியநிறுவனங்களில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய ஒரு குழுவே அமைக்கப்பட்டிருக்கும். அந்த நிறுவனத்தின் products- advertising செய்ய , content creating செய்ய , search engine-ல் அந்த நிறுவனத்தை முன்னிலைப்படுத்த என ஒவ்வொரு பணிக்கும் சிறப்பாக மற்றும் முழுமையாக பயிற்சி பெற்ற DIGITAL MARKETERS நியமிக்கப்பட்டிருப்பார்கள்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள்:
Content Marketing
E-mail Marketing
Search Engine Marketing
Social Media Marketing
Search Engine Optimization
இவையன்றி Digital Marketing-ல் இன்னும் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. முறையான பயிற்சியும் கற்றலும் இருந்தால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் அதிகப்படியான சாதனைகளை படைக்கலாம்.
தகவல் தொழில்நுட்பத்தை மிக எளிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் செயலாற்றி வருகிறது திருச்சி தென்னூரில் செயல்பட்டு வரும் inymart digi solutions நிறுவனம்.திருச்சியில் இயங்கிவரும் Inymart என்னும் கல்வி நிறுவனம் கடந்த 8ஆண்டுகளாக 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்து DIGITAL MARKETERS-களை உருவாக்கியுள்ளது.டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் Power BI ஆகியவற்றை கற்பிக்கும் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. Inymart Academy, Power BI கற்பித்தல் சேவையிலும் இந்த ஆண்டு முதல் தனது மாணவர்களுக்கு நடத்த துவங்கியுள்ளது.
POWER BI:
தொழில்நுட்பத்துறையில் வளர்ந்துவரும் பல சிறப்பம்சங்களில் Business Intelligence(BI)-ம் ஒன்று. பெரிய நிறுவனங்களுக்கு data & informations என்பவை உயிர்நாடி போன்றவை. அந்த Data மற்றும் Informations- ஐ Collect & save செய்து ஆய்வு செய்ய உதவுவதே BI ஆகும். Business Analytics மற்றும் Data Visualization ஆகியவை BI-க்கு இணையான சிறப்பு பெற்ற செயல்பாடுகள் ஆகும்.
Power BI என்பது datas-களை இணைக்க மற்றும் Visualize செய்ய மேலும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள பயன்படும் ஒரு platform ஆகும். Business Analytics மற்றும் Data Visualization கருவியாகவும் இது விளங்குகிறது. Microsoft நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சேவை Data Modelling, Data Integration self-service BI போன்ற பல செயல்பாடுகளில் உதவுகிறது. 2015- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ,115 மில்லியன் users-களை கொண்டுள்ளது. பல கல்வி நிறுவனங்களில் BI என்பது சான்றிதழ் படிப்பாகவும் வழங்கப்படுகிறது.
பல நிறுவனங்களில் Recruting செய்யும்போது Power BI கற்றவர்களே முன்னுரிமை பெறுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட Job Appilication-களில் Applicants Power Bi தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதை காணலாம். பல data கருவிகளோடு ஒப்பிடுகையில் Power BI வேலையை மிகவும் சுலபமாக்குகிறது மேலும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
Power BI படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள்:
Power BI Analyst
Data Integrator
Performance Analyst
Project Engineer
Marketing Specialist
BI Developer
Business Analyst
இவையில்லாமல் மேலும் பல வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. Power BI கற்பதன் மூலம் பணிக்கு சேரும்போது நடைபெறும் போட்டியான சூழலை வென்று ஒருவரால் நிலையாக நிற்க முடியும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் Power BI பயிற்சியில் ஈடுபட விரும்புவோர் +918056553322 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்.மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள இணையதளத்தில் காணலாம்
இணையதள முகவரி : www.inymartacademy.com
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision