சாலையில் இறந்து கிடந்த தேசிய பறவை மீட்ட டிஎஸ்பி

சாலையில் இறந்து கிடந்த தேசிய பறவை மீட்ட டிஎஸ்பி


 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தேசிய பறவையான மயில் உயிரிழந்து கிடந்தது.  உயிரிழந்த மயிலை மீட்டு துணியில் போர்த்தி சாலையில் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பாதுகாப்பாக வைத்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையம் மற்றும் தச்சங்குறிச்சி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு மான், மயில்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த காப்பு காட்டில் யானைகள் மறுவாழ்வு மையமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்த தேசிய பறவையான மயில் ஒன்று உணவைத் தேடி சிறுகனூர் பகுதிக்கு வந்துள்ளது.

அப்போது சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மயில் மீது மோதிவிட்டு சென்றது. இந்த விபத்தில் மயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து சாலையிலேயே  கிடந்தது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தேசியப் பறவை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உயிரிழந்து கிடப்பதை கண்டு உடனே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு மயில் அருகே சென்றார்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் மற்ற வாகனங்கள் மயிலின் உடல் மீது ஏறி சேதமாகமல் தடுக்க தனது வாகனத்தில் இருந்த சால்வை துணியால் மயிலை போர்த்தி பத்திரமாக மீட்டு சாலையின்  நடுவே உள்ள தடுப்பு கட்டையில் பாதுகாப்பாக வைத்தார். பின்னர் தேசியப் பறவையான மயில் உயிரிழந்த சம்பவத்தை வனத்துறையினருக்கு டிஎஸ்பி அஜய் தங்கம் தகவல் கொடுத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision