திருச்சி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு நற்சான்றிதழ்

திருச்சி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு நற்சான்றிதழ்

திருச்சிராப்பள்ளி காவல் சரகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பணிபுரியும் காவலர்கள் முதல் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் வரை உள்ள அதிகாரிகள், போக்குவரத்து காவல் பிரிவு, காவல் சிறப்பு பிரிவு, பணியிடை பயிற்சி மையம், சுருக்கெழுத்து நிருபர் பிரிவு,

அமைச்சு பணியாளர்கள், கைரேகை நிபுணர் பிரிவு, புகைப்பட பிரிவு, மோப்ப நாய் படைப்பிரிவு ஆகியவற்றில் சிறப்பாக பணிபுரிந்த 93 நபர்களுக்கு திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர் G.கார்த்திக்கேயன், திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமாங்கல்யம் திருமண மஹாலில் நற்சான்றிதழ் வழங்கினார்.

மேற்படி நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி காவல் சரக காவல்துறை துணைத்தலைவர் M.மனோகர் மற்றும் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision