திருச்சியில் நாளை (23.12.2024) வாழை திருவிழா மற்றும் விவசாயிகள் தினவிழா

திருச்சியில் நாளை (23.12.2024) வாழை திருவிழா மற்றும் விவசாயிகள் தினவிழா

திருச்சிராப்பள்ளி தாயனூர் (அஞ்சல்) தோகமலை ரோடு, உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் "வாழை திருவிழா மற்றும் விவசாயிகள் தினவிழா" நாளை (23.12.2024) (திங்கட்கிழமை) அன்று காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.

அன்றைய தினம் துணை பொது இயக்குனர், புது டெல்லி முனைவர். சஞ்சய் குமார் சிங் (தோட்டகலைத்துறை) சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார். அன்றைய தினம், தாங்கள் பயன்பெரும் வகையில், வாழை தொழில் நுட்ப கலந்தாய்வு, கருத்தரங்கம், கருத்துக்காட்சி மற்றும் வயல்வெளி செய்முறை விளக்கங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆகவே தாங்களும், தங்களுடைய வாழை பயனாளிகளும் இவ்விழாவில் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision