திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி (Season 2)

திருச்சியில் மிகப் பிரமாண்டமாக  நடைபெற இருக்கும் செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி (Season 2)

திருச்சி PET GALAXY நிறுவனம் சார்பாக சென்ற ஆண்டு விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற DOG SHOW கண்காட்சியில் 250க்கும் மேற்பட்ட நாய்கள் போட்டியில் பங்கேற்றன. இதில் பல சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில். முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000 இரண்டு வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மூன்றாம் பரிசாக இரண்டு செல்லப் பிராணிகளுக்கு ரூ.5000 பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பரிசாக ரூ. 25000 வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்தனர். இதை PET GALAXY Founder டாக்டர் கணேஷ்குமார், சிறப்பாக செய்திருந்தார்.

அதேபோல் இந்த வருடமும் இரண்டாவது முறையாக பெட் கேலக்ஸி நிறுவனம் சார்பாக All Breeds Dog Show (Season 2) நிகழ்ச்சியை ஜனவரி 12 அன்று காலை 09:00 மணி முதல் Morais City- இல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக MAKAPA ANAND கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். சிறப்பு செல்ல பிராணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 15000, இரண்டாம் பரிசு ரூபாய் 10,000 மற்றும் மூன்றாவது பரிசு ரூ.5000 வழங்கப்பட உள்ளது.

அனைத்து போட்டியிலும் சிறப்பாக செயல்படும் செல்ல பிராணிகளுக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும். இந்த போட்டியில் பங்கு பெற விரும்புவோர் முன்பதிவாக ரூபாய் 500 செலுத்தி கொள்ளவும். மேலும் தொடர்புக்கு : 63814-31799. சென்ற வருடம் நடைபெற்ற Dog Show நிகழ்ச்சியை Co- Founder நித்யா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். அதேபோல் இந்த வருடமும் சிறப்பாக நடைபெறும் என பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision