திருச்சியில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு சார்பில் 30-ந் தேதி ஆன்மீக விழா

திருச்சியில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு சார்பில் 30-ந் தேதி ஆன்மீக விழா

கோயிலை காப்போம் கோயில் உரிமையை மீட்போம் என்ற தலைப்பில் திருச்சி மாநகரில் ஆன்மீக அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஆன்மீக விழா வருகிற (30.06 2024) ஞாயிற்றுக்கிழமை திருச்சி திருவானைக்காவல் விபூதி பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுமங்கலி மஹாலில் நடைபெற உள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை தலைவர் பொன்மாணிக்கவேல் தலைமையில் காலை 06:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை நடைபெற இருக்கிறது.

இவ்விழாவில் சித்தர்கள், சிவனடியார்கள், வைணவ பக்தர்கள், சக்தி வழிபாட்டு மன்றத்தினர், சன்மார்க்க சங்கத்தினர், முருக பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள், கிராம கோயில் பூஜாரிகள் மற்றும் ஆன்மீக சான்றோர்கள் மெய்ய அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு விழா குழுவினர் சார்பில் வரவேற்கப்படுகிறது. இவ்விழாவில் ஆன்மீக பக்தர்களுக்கு தேசிய அளவில் பயன்படக்கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. விழா சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 84 89 88 61 35, 98 94 64 93 35

இவ்விழா குறித்து சிவயோகி அனுகூலநாத ராஜசேகரன் கூறுகையில்.... உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு சார்பில் ஆன்மிக விழா வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி திருவானைக்காவல் மேலவிபூதி பிரகாரம் சுமங்கலி மகாலில் நடக்கிறது. விழாவுக்கு ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமை தாங்குகிறார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1,000 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்து கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கோவில்களில் நடைபெறும் தேர் திருவிழாவின் போது அவ்வப்போது விபத்து சம்பவம் அதிகரித்து வருகிறது. அவ்வாறு நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் பணியாற்றவேண் டும். இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலங்களில் தற்போது சுமார் 5½லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே பதிவேடுகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அவர்களுடைய பதிவேட்டிலேயே இல்லை. கோவில்களுக்கு வரும் பக்தர்க ளிடம் இருந்து வசூல் செய்யும் பணத்தில் தான் திருப்பணிகள் நடக்கிறது. ஆனால் திருப்பணிகளுக்காக சொற்பத்தொகை மட்டுமேசெலவு செய்கிறார்கள். பாலாலயம் செய்த கோவில்களில்கூட 5 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் காலதாமதம் செய்வது பக்தர்களிடையே வேதனையை உருவாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision