சிறுதானிய மூலிகை பிஸ்கட் விற்பனையில் அசத்தும் பாட்ஃபுட்ஸ் நிறுவனம்

சிறுதானிய மூலிகை பிஸ்கட் விற்பனையில் அசத்தும் பாட்ஃபுட்ஸ் நிறுவனம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு பிரதான உணவுப் பொருளாக பிஸ்கட்டுகள் இருக்கின்றன. பிஸ்கட்டுகள் அனைத்தும் மைதா மற்றும் சர்க்கரையால் செய்யக்கூடியதாக இருப்பதால் உடலின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் ஒருபுறம் இருக்கத் தான் செய்கிறது. மக்களுக்கு உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது என்பதன் வெளிப்பாடாய் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரையை பயன்படுத்துதல், தினைவகைகளை  உணவில் சேர்த்துக் கொள்வது மக்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கிரீன் லிப்ஸ்ஃபுட்ஸ் & பேக்கேஜஸ் நிறுவனத்தின் மூலம் "பாட் ஃபுட்"என்ற பெயரில் நாட்டு சக்கரை தினை மூலிகைகளை பயன்படுத்தி பிஸ்கட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் EEE துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறுப்பாளர்  
ராஜ மணிகண்டன் என்பவரால் தொடங்கப்பட்டது.

இயற்கையான முறையில் சிறுதானிய மூலிகை பிஸ்கட்டுகள் வெண்தாமரை பிஸ்கட், ஐந்து வகையான கீரை பிஸ்கட்டுகள், வாழைத்தண்டு பிஸ்கட் வல்லாரை பிஸ்கட், தூதுவளை பிஸ்கட், செம்பருத்திப் பூ பிஸ்கட், ஆவாரம் பூ பிஸ்கட், முருங்கைக்கீரை பிஸ்கட், நெல்லிக்காய் பிஸ்கட், முடக்கத்தான் கீரை பிஸ்கட் என்று வகை வகையான பிஸ்கட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து ராஜ மணிகண்டன் பகிர்ந்து கொள்கையில், பலரின் விருப்ப சிற்றுண்டி பட்டியலில் பிஸ்கட்டுகள் முக்கிய இடம்பிடிக்கின்றன. கடைகள், மால்களில் அதிகமாக விரும்பி வாங்கப்படும் சிற்றுண்டிகள் குறித்து ஆய்வு செய்ததில் பிஸ்கட்டுகள் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது.

எனவே அது சார்ந்த ஒன்றை தான் நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்து தானியங்கள் மற்றும் மூலிகைகளின் பிஸ்கட்டுகளை தயாரிக்க தொடங்கினோம். மைதா மற்றும் வெள்ளை சர்க்கரை கலக்காமல் நாட்டு சர்க்கரை பயன்படுத்தி  தயார் செய்து விற்பனை செய்து போது குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பினர். ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் இருக்கின்றது எனவே அவர்களுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டி கொடுக்க வேண்டுமென்று பிஸ்கட்டுகளை செய்ய தொடங்கினோம்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றோம். e-commerce முறையில் இப்போது விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் கல்லூரி நிர்வாகத்தின் ஆதரவும் மாணவர்களின் பங்கும் மிகப்பெரியது. 20 முதல் 30 மாணவர்கள்  ஈடுபட்டனர் ஒவ்வொரு பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளனர்.

வேளாண் மாணவர்கள் உணவுக்கலவைகளைக் குறித்து தீர்மானித்தல், தொழில்நுட்ப ஆதரவு வழங்குவது, வலைதளங்களை உருவாக்குவது, விற்பனை முறை குறித்து பல்வேறு வகையில் தங்களுடைய கல்வி திறனையும் வெளிப்படுத்தும் வகையில் இதில் ஈடுபட்டுகின்றனர் என்றார். இதனுடைய தொடர் முயற்சியாய் கீரைகளிலிருந்து சோயாசங்க் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய விற்பனை செய்யவும், ஹெர்பல் சாக்லேட்டுகள் தயாரிக்கவும்
திட்டமிட்டுள்ளனர். திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் நபார்டு வங்கி உதவியோடு வாழை மரங்களின் கழிவுகளிலிருந்து வாழையிலை தட்டுகள், கப்புகள் மற்றும் ஸ்விட்ச் பாக்ஸ் போன்றவற்றை தயாரித்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision