திருச்சி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவிகிதம்

மார்ச் ஏப்ரல் ல் நடைபெற்ற 2024- 2025 கல்வி ஆண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகளை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 259 பள்ளிகளில் பயின்ற 15,050 மாணவர்களும் 16,599 மாணவிகளும் மொத்தமாக 31 ஆயிரத்து 649 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர்.
இதில் 13,252 மாணவர்களும்,15 ஆயிரத்து 964 மாணவிகளும்,மொத்தமாக 29,216 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.5% மாணவர்களும் 96.17 சதவீதம் மாணவிகளும் மொத்தமாக 92.31% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதம் 92.31% ஆகும்.
மாநில அளவில் தேர்ச்சிசதவீதம் 92.9% ஆகும். அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்கள் 5317 பேர் அதில் தேர்ச்சி பெற்றோர் 4381 பேர். தேர்ச்சி சதவீதம் 82.40%. மாணவிகள் 5878 பேர், மாணவர்கள் 5436 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.48%.அரசுப் பள்ளிகள் தேர்வு எழுதியவர்கள் 87.69% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை எட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 14 தனியார் பள்ளிகள் 36 மொத்தம் 56 அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள் 100% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பில் மொத்தமாக அரசு பள்ளி மாணவ மாணவிகள் 13,193 தேர்வு எழுதியுள்ளனர். இதில் 12,589 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 95.42%தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் திருச்சி மாவட்டம் 93.80 சதவீதம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பில் திருச்சி மாவட்டம் மாநில அளவில் ஐந்தாவது தரவரிசையில் உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision