உங்களது வருமான வரி 'ரீஃபண்ட்' எந்த கட்டத்தில் உள்ளது?

உங்களது வருமான வரி 'ரீஃபண்ட்' எந்த கட்டத்தில் உள்ளது?

உங்களது வருமான வரி 'ரீஃபண்ட்' எந்த கட்டத்தில் உள்ளது?

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரும் ஜூலை 31-ஆம் தேதி தான் கடைசிநாள். அதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு, அதனை சரிபார்ப்பதும் (verify அல்லது e-verify)செய்வதும் அவசியம். இதைச் செய்ய தவறினால், வருமான வரி கணக்கு தாக்கல் failure ல் முடிந்துவிடும்.

இந்த செயல் முறையில், நீங்கள் 2023-24ஆம் நிதியாண்டில் கூடுதலாக செலுத்திய வருமான வரியை திரும்பப் பெறலாம்.

டிடிஎஸ் (Tax Deducted at Source) அல்லது டிசிஎஸ் (Tax collected at source) அல்லது Self Assessment tax போன்ற வகைகளில் நாம் செலுத்தும் கூடுதல் தொகைகளை வருமான வரித்துறை கணக்கிடும். வருமான வரி மதிப்பீட்டின் போது சமர்ப்பித்த exemptions and deduction கள் அடிப்படையிலேயே வரி கணக்கிடப்படுகிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு அதனை சரிபார்த்த (verify அல்லது e-verify) பிறகே, நீங்கள் கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறும் (ரீஃபண்ட்) செயல்முறை தொடங்கும். வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில், வரி செலுத்துவோரின் கணக்கில் 4 முதல் 5 வாரங்களுக்குள் ரீஃபண்ட் தொகை செலுத்தப்பட்டு விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை ரீஃபண்ட் தொகை மேற்கூறப்பட்ட காலத்திற்குள் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனில், வருமானவரி கணக்கு தாக்கலில் (ITR) ஏதேனும் தவறு இருக்கிறதா என்று நீங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

வருமான வரித்துறையிடம் இருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு (இ-மெயில்) ஏதேனும் தகவல் வந்துள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். 

e-Filing இணையதளத்தில் ரீஃபண்ட் செயல்முறை ஸ்டேட்டஸை நீங்கள் சரிபார்க்கலாம்.

ரீஃபண்ட் பெற முடியாமல் போவதற்கான காரணங்கள்:

உங்கள் வங்கி கணக்கு நிச்சயம் ‘ப்ரீ-வேலிடேட்’ செய்யப்பட்டிருக்க வேண்டும். வங்கி கணக்கு ‘ப்ரீ-வேலிடேட்’ செய்யப்படாமல் இருந்தால் ரீஃபண்ட் தோல்வி அடையலாம்.

ஒருவேளை பான் கார்டு மற்றும் வங்கி கணக்கில் உங்கள் பெயர் சரியாக பொருந்தவில்லை எனில் ரீஃபண்ட் தோல்வியடைய வாய்ப்புள்ளது.

வங்கியின் IFSC குறியீடு தவறாக இருந்தால்.

உங்கள் கணக்கில் ITR Closed என குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்திலும் ரீ ஃபண்ட் தோல்வியடையலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision