திருச்சி திருவானைக்கோயில் இரணி அம்மனுக்கு முதல் காப்பு கட்டும் விழா தொடங்கியது.

திருச்சி திருவானைக்கோயில்  இரணி அம்மனுக்கு முதல் காப்பு கட்டும் விழா தொடங்கியது.

திருவானைக்கோயில் எல்லை காவல் தெய்வமான பிடாரி இரணி அம்மனுக்கு முதல் காப்பு கட்டும் விழா இன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவானைக்கோயில் உற்சவ மண்டபத்திலிருந்து இரணியம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு வெள்ளித்திருமுத்தம் பகுதியில் அமைந்துள்ள  இரணியம்மன் கோயிலுக்கு சென்று சேர்ந்தது.

வழி நெடுக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரண்டாம் காப்பு வரும் 15ஆம் தேதியும் மூன்றாம் காப்பு 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கட்டப்பட்டு அன்று மாலை அம்மன் யானை வாகனத்தில் புறப்பட்டு அனைத்து வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள் இருபத்தி ஒன்றாம் தேதி குதிரை வாகனத்திலும், 22 ஆம் தேதி பூத வாகனத்திலும் அம்மன் எழுந்தருவார்.

முக்கிய விழாவான தேரோட்ட விழா 23ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும் இதில் இரணியம்மன் அனைத்து வீதிகளிலும் வலம் வரும்போது வீடுகள் தோறும் மாவிளக்கு போட்டு வணங்குவார்கள். இந்த விழாதான் தமிழகத்தின் முதல் எல்லைக் காவல் தெய்வ விழா என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn