ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா - பால்குடம், தீர்த்த குடம் மற்றும் ஏரோபிளேன் அலகு எடுத்த பக்தர்கள்

ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா - பால்குடம், தீர்த்த குடம் மற்றும் ஏரோபிளேன் அலகு எடுத்த பக்தர்கள்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்து பாலசமுத்திரம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் சிறப்பாக நடைபெற்றது. அதற்குப்பின் அம்மனுக்கு திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காரைக்காடு சென்று கருப்பண்ணசாமியை அழைத்து வருதல் தோளூர்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், திமுக பிரமுகருமான தொழிலதிபர் ப. சரவணன் ஏற்பாட்டின் படி செண்டை மேளம் நிகழ்ச்சியுடன்

தொட்டியம் காவிரி ஆற்றிற்கு சென்று கிருத்திகை குழு சார்பில் பால்குடம், தீர்த்த குடம், இளநீர் காவடி எடுத்து வந்து அருள்மிகு பால விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மனுக்கு அபிஷேகம் அக்னி சட்டி மற்றும் மிக பிரமாண்டமான ஏரோபிளேன் அலகு குத்துதல் பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் நடந்து வந்து திருவீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவிழாவில் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அஷ்ட லட்சுமிகள், அலங்காரம் மற்றும் சமயபுரம் மாரியம்மன் அலங்காரம், ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிகளில் பாலசமுத்திரம் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision