திருச்சியில் முதல் முறையாக செந்தூரப் பூ மரம் நடும் விழா

திருச்சியில் முதல் முறையாக செந்தூரப் பூ மரம் நடும் விழா

திருச்சிராப்பள்ளி கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் அருகில் தமிழகத்தின் முதல் செந்தூரப்பூ மரக்கன்றினை மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார்  இன்று (4.7.22) நட்டார்.

பின்னர சில மரக்கன்றுகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.செந்தூரப் பூ மரம் வட இந்தியாவில் மட்டும் உள்ளது . இதனை உணர்ந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை , செயலராகப் பணியாற்றும் டாக்டர் சி.ஆர்.பிரசன்னா  தீவிர முயற்சியால் இம் மரத்தின் விதைகள் மூலம் இம்மரக்கன்றுகள் தமிழகத்தில் வளர்க்கப்பட்டது.

மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு , பசுமை சிகரம் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் முதல் செந்தூரப் பூ மரம் நடும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மரம் அறக்கட்டளை நிர்வாகி தாமஸ், தண்ணீர் அமைப்பு நிர்வாகி நீலமேகம் மற்றும் ராஜூ ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO