தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி -தமிழ்நாடு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மிஸ்டர் ஹல்க் ஹிம், ஸ்ட்ராங்க் மேன் ஜிம் மற்றும் இந்தியன் பிட்னஸ் ஃபெடரேஷன் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4-ஆம் ஆண்டு தென் இந்திய அளவிலான ஆணழகன் போட்டியில் தமிழகம் சார்பில் கன்னியாகுமாரியை சேர்ந்த அங்கீஷ் பிரசாத் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று கோப்பை வென்றார்.
மணப்பாறையில் மிஸ்டர் ஹல்க் ஹிம், ஸ்ட்ராங்க் மேன் ஜிம் மற்றும் இந்தியன் பிட்னஸ் ஃபெடரேஷன் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை 4-ஆம் ஆண்டு தென் இந்திய அளவிலான ஆணழகன் போட்டி கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. புதியின் மகிமை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பி.ஞானப்பிரகாசம், சிந்துஜா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் பி.கலையரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போட்டியில், ஸ்ரீ சக்தி கண்ணன் சிட்ஸ் நிறுவன மேலாண் இயக்குனர் கே.வினோத்குமார், நிர்வாக இயக்குனர் எஸ்.ராஜமாணிக்கம், தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நல்லாசிரியர் கே.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜூனியர், சீனியர், மாஸ்டர், ஆண் – பெண் பிட்னஸ் ஆகியோருக்கான போட்டிகளில் ஜூனியர் பிரிவில் 60, 70, 70 ப்ளஸ் வகையிலும், ஜூனியர் - சீனியர் பொது போட்டி, சீனியர் பிரிவில் 55, 60, 65, 70, 75, 80 மற்றும் 80 ப்ளஸ் ஆகிய 7 வகையிலும், ஜூனியர் – சீனியர் மென் பிட்னஸ், பெண்களுக்கான போட்டி என போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரியை ஆகிய மாநிலங்களை சேர்ந்த 170 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
இதில் தமிழகம் சார்பில் கன்னியாகுமாரியை சேர்ந்த அங்கீஷ் பிரசாத் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று கோப்பை வென்றார். அவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான உடற்பயிற்சி மிதிவண்டி, சுழற்கோப்பை, வீர வாள், சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. அதேபோல் இரண்டாம் இடத்தை பிடித்த மதுரை மணிகண்டனுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமும், மூன்றாம் இடத்தை பிடித்த தேனி குப்பமுத்துக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை, சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது.
திருச்சி இந்தியன் பிட்னஸ் ஃபெடரேஷன் தலைவர் கே.கலைச்செல்வம், நிறுவனர் மற்றும் பொதுசெயலாளரான எஸ்.ஜெகநாதன் ஆகியோர் வரவேற்புரையும், மிஸ்டர் ஹல்க் ஹிம் நிறுவனர் ஸ்டாலின் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நன்றியுரையும் கூறினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..