திருச்சி மாநகரத்தில் கடந்த 2 மாதங்களில் 375 ரவுடிகள் சிறையில் அடைப்பு

திருச்சி மாநகரத்தில் கடந்த 2 மாதங்களில் 375 ரவுடிகள் சிறையில் அடைப்பு

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம், அதனை தடுக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். காவல் ஆணையர் மேலான உத்தரவின்பேரில், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் 
ரவுடிகள், சட்டவிரோத கஞ்சா விற்பனை, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை 
எடுக்கவும், போக்குவரத்தை சரிசெய்யவும் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதன்படி, கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 
பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு செய்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் 
ஈடுபட்டு வந்த 375 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களிடம் 158 ரவுடிகளை ஆஜர் செய்து குற்ற செயலில் ஈடுபடாத வண்ணம் பிணை பத்திரம் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிணை பத்திரத்தை மீறி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 ரவுடிகள் மீது பிணை முறிவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்த 18 ரவுடிகள், திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற செயல்களில் ஈடுபட்ட 8 எதிரிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு எதிரி மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த ஒரு எதிரி என 28 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 15 எதிரிகளை கைது செய்து, ரூ.2 லட்சம் 
மதிப்புள்ள கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட எதிரிகளை 
சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த எதிரி ராஜ்குமார் (எ) வீரப்பன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 70 எதிரிகளை கைது செய்து, ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட எதிரிகளை சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 67 எதிரிகளை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறு செய்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ரவுடிகள், சட்டவிரோத தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை, தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து 
கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படியான, கடுமையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn