இலக்கிய பேராசான் ஜீவா பெயரில் இலக்கிய விருது-கலை இலக்கிய பெருமன்ற மாநாட்டில் தீர்மானம்.

இலக்கிய பேராசான் ஜீவா பெயரில் இலக்கிய விருது-கலை இலக்கிய பெருமன்ற மாநாட்டில் தீர்மானம்.

 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற திருச்சி புறநகர் மாவட்ட இரண்டாவது மாநாடு திருவெறும்பூரில் 24.04.2022 ல் நடைபெற்றது அம்மாநாட்டில் நடனம், ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு , சான்றிதழ் வழங்கப்பட்டது, 

இந்திய சுதந்திர போராட்ட வீரரும்,விடுதலைக்குப் பின்பும் ஏழை எளிய மக்களுக்காக போராடியவருமான இலக்கிய பேராசான் ஜீவானந்தம் அவர்களின் பெயரில் தமிழக அரசு இலக்கிய விருது வழங்க வேண்டும்.பேராசான் ஜீவானந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழகஅரசு கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

இரு மொழிக் கொள்கைக்கு எதிராக வலுக்கட்டாயமாக நடைபெறுகின்ற இந்தித் திணிப்பை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்துவதுடன், இதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு திட்டங்கள் தீட்டி உறுதி செய்ய வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. 

பின் புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்,

கலை இலக்கியப் பெருமன்ற திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள்:தலைவர்: த. தங்கமணி,

சிறப்புத் தலைவர்: முனைவர் சோ. மனோன்மணி,துணைத் தலைவர்கள்: . ஓவியர் வீராச்சாமிU பக்கிரிசாமி,மாவட்டச் செயலாளர்:ப.லெனின்,துணைச்

செயலாளர்கள்:ஜான் பீட்டர்,ஜெயக்கொடி.பொருளாளர்-பஷீர் ஒன்றிய கவுன்சிலர் இளையராணி, ரேணுகா தேவி, தீரன் எம்.சுப்பிரமணி, 

உள்ளிட்ட இருபத்து மூன்று பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO