திருச்சி எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் சார்பில் ஆயிரம் மாணவர்களின் தேசியக்கொடி வடிவம் - பிரமிப்பு

திருச்சி எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் சார்பில் ஆயிரம் மாணவர்களின் தேசியக்கொடி வடிவம் - பிரமிப்பு

நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு கல்வி நிறுவனங்களும் சுதந்திர தின கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் திருச்சி இருங்களூரில்  உள்ள எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் சார்பில் 75 ஆவது சுதந்திர தினத்தை பறைசாற்றும் வகையில், ஆயிரம் மாணவ, மாணவிகள் தேசியக்கொடி அமைப்பில் அணிவகுத்து நின்று கைகளில் மூவர்ண பலூன்களை ஏந்தியபடி தேசிய கொடி போன்ற அமைப்புடன் நின்றனர். தேசியக்கொடி வடிவில் மாணவர்கள் நின்றது கண்ணை கவரும் வகையில் அமைந்தது.

எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் பயிலக்கூடிய மாணவ, மாணவிகள் ஆயிரம் பேர் ஒன்று திரண்டு தேசியக் கொடி வடிவில் நின்று கைகளில் மூவர்ண பலூன்களை ஏந்தியபடி தேசியக்கொடியை காட்சிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் இயக்குனர் மால்முருகன்,  இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி,கோ சேர்மன் நிரஞ்சன் உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO