மின் கம்பத்தில் சிக்கிய திருச்சி மலைக்கோட்டை தேர்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், சித்திரை திருத்தேரோட்ட விழா கடந்த (25.04.2023)ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று (03.05.2023) நடைபெற்றது.
மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் வீற்றிருந்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரைவடம்பிடித்து இழுத்துச்சென்றனர். நான்கு ரத வீதிகளின் வழியாக வலம்வந்து பின்னர் தாயுமானவர் சன்னதிக்குச் சென்றடைவார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் கண்டனர்.
இதற்கிடையில் காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய மலைக்கோட்டை சித்திரை தேர் நிலையில் இழுத்து சென்ற சில நிமிடங்களில் சறுக்கு பாறை பகுதியில் சாலையில் இருந்த மின்கம்பத்தில் சுவாமி அம்பாள் வீற்றிருந்த தேர் மாட்டிக்கொண்டது. அங்கிருந்து மீட்டு சிறிது தூரம் வந்த பொழுது மற்றொரு மின் கம்ப கம்பில் சிக்கியது.
பின்னர் மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பத்தில் இருந்த கம்பிகள் முழுவதும் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு மணி நேரம் 30 நிமிடம் தாமதத்திற்கு பிறகு மீண்டும் தேர் புறப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேரோட்டத்தில் சுவாமி அம்பாள் ஒரு தேரிலும் மட்டுவார் குழலம்மை மற்றொரு தேரிலும் வீற்றிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn