முக கவசம் மற்றும் மரக்கன்று வழங்கிய திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவரின் புது முயற்சி
இன்று காலை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வாகனங்களில் இ- பதிவு, மற்றும் முக கவசம் அணிந்திருப்பது போன்றவற்றை கண்காணித்தார். முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் மற்றும் மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இது குறித்து அவர் கூறியதாவது... இன்றைய சூழலில் ஆக்சிசன் தேவை அதிகமாக உள்ளது நமது தமிழக முதலமைச்சரும், சுகாதாரத் துறையினரும் மிகவும் வேகமாக செயல்பட்டு வருகின்றன. பொது மக்களாகிய நாம் அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் இப்போது மரக்கன்று வைத்தால் வருங்காலத்தில் ஆக்சிசன் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கும்.
அதன் முதல் படியாக தான் இன்று முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் மற்றும் மரக்கன்று கொடுத்து மரம் வளர்க்க ஊக்குவித்தோம், வெளியில் தேவை இன்றி நடமாட வேண்டாம் என்று வலியுறித்தினோம் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK