பயன்படுத்திய கையுறைகளால் சுகாதார சீர்கேடு

பயன்படுத்திய கையுறைகளால் சுகாதார சீர்கேடு

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் கொரோனா பயத்திலும் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவின் போது கொரோனா பரவலை தடுக்க, அரசு அலுவலர்களுக்கு பிளாஸ்டிக் கையுறை, சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி என பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 27வது வார்டில் உள்ள செந்தணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் வாக்கு பதிவின் போது வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி வாக்குசாவடி முகவர்கள் பலர் பயன்படுத்திய பிளாஸ்டிக் கையுறைகளை குப்பை தொட்டியில் போடவில்லை. வாக்குச்சாவடியிலும், பொது இடங்களிலும் வீசி சென்றுள்ளனர். 

பள்ளிகளிலும், கல்லூரிகள் அனைத்தும் வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 
கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் இல்லாமல் ஆசிரியர்கள் மட்டும் வந்து செல்லுகிறார்கள். இதனையடுத்து 4 நாட்களாக இந்த பகுதியில் பிளாஸ்டிக் கையுறைகள் அகற்றப்படாமல் உள்ளது.

அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படும்  சூழ்நிலை இருப்பதால் அலட்சியம் காட்டாமல், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு ஆங்காங்கே கிடக்கும் பிளாஸ்டிக் கையுறை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr