வகைவகையான தோசை, அடை  -அசத்தும் திருச்சி நைனா கடை!!

வகைவகையான தோசை, அடை  -அசத்தும் திருச்சி நைனா கடை!!

உணவு பிரியர்களுக்கு உயர்தர உணவகங்கள் விட சாலையோர உணவகங்களில் உண்பது. அலாதியான விருப்பம் என்றால் ஆச்சரியமில்லை சாலையோர கடை என்றாலே நமக்கு ஏற்படும் சுத்தம், தரம், உபசரிப்பு குறித்தான தயக்கங்கள் அனைத்தும் நைனா கடைக்குச் சென்றால் தீர்ந்துவிடும், அத்தனை சுத்தம்.

தன் கடைக்கு வரும் ஒவ்வொருக்கும் மிக பொறுமையாக உபசரிக்கும் உரிமையாளரால் வாடிக்கையாளர்கள் பொறுமையாகக் காத்திருந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

திருச்சி தில்லை நகரில் தினமும் மாலை 7 மணி அளவில் தொடங்கி இரவு 11 மணி வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது நைனா தோசை கடை. கடலை எண்ணெய், நெய் வெண்ணை மட்டுமே பயன்படுத்தி நாற்பதுக்கும் அதிகமான சுவையில் தோசை, அடை, சப்பாத்தி போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார் 72 வயதான கேசவன்.

திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட கேசவன் வேலையின் காரணமாக திருச்சிக்கு வந்துவிட மக்களுக்கு ஏதேனும் ஒன்றை புதுமையாக கொடுக்க வேண்டும் அதே நேரத்தில் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்ற அவரின் மகனின் விருப்பப்த்தினால் மாலை நேர உணவகமாக தொடங்கப்பட்டது இந்த கடை. எதிர்பாராத வகையில் தன் மகன் ஒரு விபத்தில் இறந்து விட அவரின் நினைவாக இந்த கடையை 35 ஆண்டுகளாக நடத்தி வருகிறாராம்.

லாப நோக்கமற்று தன் மகனின் நினைவாய் இதனை தொடர்ந்து செய்து வருகிறார் கேசவன். தன் மனைவி மற்றும் இரண்டு வேலை ஆட்கள் உதவியோடு வீட்டிலேயே மாவு அரைப்பது, பொடி தயார் செய்வது என்று அனைத்தையும் தாங்களே தயார் செய்து நடத்தி வருகின்றனர். பூண்டு பொடி தோசை, வெங்காயம் வெண்ணை மசால் தோசை என வகைவகையான தோசை, 15க்கும் மேற்பட்ட வகையில் அடை, சப்பாத்தி ரோல் என தன் கடைக்கு என்று தனியே ஒரு அடையாளத்தை வைத்திருக்கிறார்.

மலிவான விலையில் சுத்தமான சுகாதாரமான அதே நேரத்தில் அதிக சுவையோடு உண்ண விரும்பும் அனைத்து உணவு பிரியர்களும் திருச்சியில் நைனா தோசை கடை ஒரு  வரப்பிரசாதம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn,