பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்

பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்

திருச்சி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு குப்பைகள் நிறைந்து குப்பை மேடாக காட்சி அளிப்பதாகவும், இதில் இருந்து துர்நாற்றம் வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ராஜகோபுரம் முன்பு குப்பைகளை அகற்றி கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து செய்தி வெளியான நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர் ஸ்ரீரங்கம் சுகாதார ஆய்வாளர் சகாயராஜ் தலைமையில் பணியாளர்கள் உடனடியாக அந்த இடத்தில் இருந்த குப்பைகள் அகற்றி, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த இடம் தற்போது தூய்மையாக உள்ளது.

மேலும் இந்த இடத்தில் குப்பைகள் கொட்டாதவாறு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn,