ஏபிவிபி திருச்சி கோட்ட அலுவலகம் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு திருச்சி கோட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மணல், கற்கள் மற்றும் பெட்ரோல் கலந்த பொருளை அலுவலகத்தின் ஜன்னல் வழியாக தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த அலுவலகத்தில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. இது குறித்து இவ்வமைப்பின் நிர்வாகிகள் உடனடியாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதனையடுத்து திருச்சி கோட்ட அலுவலகத்தில் மர்ம பொருளை எறிந்து சேதப்படுத்தி, நிர்வாகிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி அண்ணா சிலை அருகில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn,