காலை உணவு திட்ட துவக்க விழா

காலை உணவு திட்ட துவக்க விழா

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காடுவெட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்ட துவக்க விழா நடைபெற்றது.

பள்ளி மாணவ - மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து பள்ளி குழந்தைகளுக்கு கேசரி, இட்லி, கிச்சடி சாம்பார், சட்னி ஆகியவற்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து காலை சிற்றுண்டியை சாப்பிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் பேசிய முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன்.... சத்துணவில் மீண்டும் வாழைப்பழத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்கிட முதலமைச்சரிடம் கோரிக்கை வைப்பேன். இதன் வாயிலாக வாழை விவசாயிகள் வாழ்வு வளம் பெறும் குழந்தைகளின் உடல்நலம் மேம்படும் என்று கூறினார். நிகழ்வில் முசிறி கோட்டாட்சியர் ராஜன், ஒன்றிய செயலாளர் திருஞானம், ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி துணை தலைவர் சத்தியமூர்த்தி, தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, காட்டுப்புத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் சுதாசிவ செல்வராஜ், ஆணையர்கள் ஞானமணி, சரவணகுமார், இளைஞர் அணி நிர்வாகிகள் கார்த்திக், மூர்த்தி, அகத்தீஸ்வரன், பள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர்கள், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision