பாஜக மணல் மாஃபியாவால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர் அரசு மருத்துவமனையில் அனுமதி

பாஜக மணல் மாஃபியாவால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர் அரசு மருத்துவமனையில் அனுமதி

பாஜக-வின் திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியை சேர்ந்த விஜி (எ) மணல் விஜி என்பவர் மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் தினமும் இரவு 1 மணியிலிருந்து காலை 4 மணி வரை டிப்பர் லாரிகளில் மணல் எடுத்து ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.

ஸ்ரீரங்கம் பகுதியில் வசித்து வரும் சமூக செயற்பாட்டாலரும் பிரபல பத்திரிக்கை நிருபரும் - சமூக ஆர்வலருமான நரேந்திரன் மேலூர் முதல் கல்லனை வரை ஆற்றுமணல் திருட்டு போவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் ட்ரோன் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு வாட்ச்சப் மூலம் செய்தி அனுப்பி இருந்தார். இந்த செய்தி ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் காட்டு தீ போல பரவியது. இந்த செய்தியை பார்த்த பாஜக பிரமுகர் மேலூர் விஜி & Co இரண்டு நாட்களாக நரேந்திரன் எங்கு செல்கிறார் என்பதை ஆட்கள் மூலம் கண்காணித்து (27.4.2024) மாலை 5:30 மணிக்கு குளிக்க சென்றவரை பின்தொடர்ந்து சுமார் 15 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றிவளைத்துள்ளனர்.

பின்னர் செல்போனை பிடிங்கி வைத்து கொண்டு மேலூரில் திருட்டு மணல் எடுக்கும் நாங்கள். அனைவரும் சேர்ந்து காவல்துறைக்கும், பொதுபணி துறைக்கும், வருவாய்துறைக்கும் மாதமாதம் மாமுல் கொடுத்தே இந்த தொழிலை செய்து வருகிறோம். ஆனால் நீ அடிக்கடி செய்தி போடுவதால் எங்களால் தொழில் செய்ய முடியாத நிலை வருகிறது.. இத்துடன் செய்தி போடுவதை நிறுத்திக்கொள் இல்லையேல் உன்னையும், உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம் என அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்து உன்னையும், இது போன்று செய்தி போடும் ஸ்ரீரங்கத்தில் உள்ள அனைத்து சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களையும் கொல்லாமல் விட மாட்டோம் என பேசிகொண்டிருக்கும் போதே திடீரென பாஜக பிரமுகர் மேலூர் விஜி கொலைவெறியுடன் தாக்கி உள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த நரேந்திரன் சீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அரசு அனுமதி பெற்ற ஒப்பத்ததாரர்கள் மணல் அதிகமாக அள்ளியதால் அமலாக்க துறை மாவட்ட ஆட்சியரை அழைத்து விசாரிக்கும்போது எந்த விதமான அனுமதியும் இல்லாமல் திருட்டுதனமாக மணல் எடுக்கும் இவர்களை நடவடிக்கை எடுப்பது யார்? என்று திருச்சி மாவட்ட சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision