சிவா நினைவு கோப்பை - மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி

சிவா நினைவு கோப்பை - மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி

தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை பிரபலப்படுத்தவும், மரபு வழி சிலம்ப கலையினை மீண்டும் வருங்கால இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தியன் இளையோர் பாரம்பரிய சிலம்பம் அசோசியேசன் சார்பில் சிவா நினைவு கோப்பை - 2024 மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி ஆர்.சி மேல்நிலைப்பள்ளி உள் அரங்கில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

 13 மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் குத்துவரிசை, நடுகம்பு வீச்சு, ஒற்றை, இரட்டைக் கம்பு, தொடுமுறை கம்பு, சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்களின் வேகம், ஸ்டைல், ஆற்றல் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு மதிப்பெண் வழங்கி பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. 

மழலையர், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்களது ஆற்றல்மிகு சிலம்பத் திறனை நிகழ்த்தி காட்டினர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் வீரர், வீராங்கணைகளுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision