டிபன் கடை நடத்தி வந்த பெண்ணை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை
திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, திருச்சி மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் எதிரிகள் மீது பதிவு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
திருச்சி விமான நிலையம் காந்திநகர் பகுதியில் டிபன் கடை நடத்தி வந்த உமா சத்தியா.கடந்த (11.08.2019)-ந் தேதி ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காந்திநகர் மெயின்ரோட்டில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துகிடப்பதாக அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்தும், புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் எதிரியான ஏர்போர்ட் காந்திநகரை சேர்ந்த சிவசண்முகம் (45), த.பெ.நடராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த (03.10.2019)-ந் தேதி மேற்படி எதிரி சிவசண்முகம் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட 3- வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்கவேல் நீதிமன்ற விசாரணையை முடித்து, இன்று (26.03.2024)-ம் தேதி, மேற்படி எதிரி சிவசண்முகத்திற்கு ச/பி 302 IPC ன்படி ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் ரூ.5000/-ம், அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன் ஆஜராகி அரசு சார்பாக வாதாடினார். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அப்போதைய ஆய்வாளர் பெரியசாமி, புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்ப்படுத்திய தற்போதைய ஏர்போர்ட் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, வெகுவாக பாரட்டினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision