திருச்சி இடையபட்டி கிராமத்தில் முறையற்ற தூர்வாரும் பணியினால் சேதமடைந்த பயிர்கள்

திருச்சி இடையபட்டி கிராமத்தில் முறையற்ற தூர்வாரும் பணியினால் சேதமடைந்த பயிர்கள்

திருச்சி மணப்பாறை கே.பெரியபட்டி தெற்கு இடையபட்டி கிராமத்தில் ஆதிதிராவிட ஊரணி குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் சிறிது நாட்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டு  தூர்வாரபட்டது அப்போது குளத்தை தூர்வாரியதோடு குளத்தின் அருகில் அமைந்துள்ள சுடுகாட்டினையும் தூர்வாரி குளமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கலிங்கம் உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. இதனால் தகுந்த வகையில் வடிகால் இல்லாமல் இந்த குளம் நிரம்பி வழிந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும் இதனை ஒட்டி அமைந்துள்ள கிணற்றிலும் குளத்து நீர் நிரம்பி கிணற்றிலும் செயல்பட்டு வருகிறது. இந்தக் குளத்தின் அருகிலேயே 10 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது தற்போது நீரானது நிரம்பி கிணறு மற்றும் விவசாய நிலங்களில் வடிகால் வசதி இல்லாமல் பயிர்களை சேதம் செய்துள்ளது. தவறான வகையில் தூர்வாரப்பட்டு உள்ளது என்பது குறித்து இப்பகுதி மக்கள் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வருவாய் அலுவலர் பஞ்சாயத்து தலைவர் என பலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது... தவறான முறையில் சுடுகாடு தூர் வாரப் பட்டதால் முறையற்ற வகையில் தண்ணீர் விவசாய நிலங்களுக்கும்  வழிந்து ஓடுகிறது எதனடிப்படையில் தூர்வாரப்பட்டது என பொதுப்பணித்துறையினர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் கேட்டால் அவர்கள் இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்ற பதிலையே கூறுகின்றனர்.

மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளோம் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு கலிங்கத்தின் உயரத்தைக் குறைத்து  வடிகால் பிரச்சனையை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn