இன்று நள்ளிரவு முதல் மாதாந்திர சுங்க கட்டணம் குறைவதுடன் மற்ற வகையான சுங்க கட்டணத்தில் மாற்றமில்லை

இன்று நள்ளிரவு முதல் மாதாந்திர சுங்க கட்டணம் குறைவதுடன் மற்ற வகையான சுங்க கட்டணத்தில் மாற்றமில்லை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆண்டு ஒரு முறை சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் மாற்றம் பெறுகிறது.

அதில் ஏற்கனவே கார் உள்ளிட்ட வாகனங்கள்ஒருமுறை செல்வதற்கு ரூ.80ம் ஒன்றுக்கு மேற்பட்ட முறைக்கு ரூ.120, மாத கட்டணம் ரூ.2420 என நியமிக்கப்பட்டிருந்தது. அது தற்பொழுது புதிய கட்டணமாக ஒருமுறை மற்றும் பலமுறை கட்டணத்தில் மாற்றமில்லை. மாதந்திர கட்டணம் 20 ரூபாய் குறைந்து ரூ. 2400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் வேன் மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை கட்டணம் ரூ.140, பலமுறை கட்டணம் ரூ.210, மாதாந்திர கட்டணம் ரூ.4230 என்று இருந்தது தற்போது ஒருமுறை மற்றும் பலமுறை கட்டணத்தில் மாற்றமில்லை மாதாந்திர கட்டணம் ரூ.30 குறைந்து ரூ.4200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பஸ், டிராக் போன்ற வாகனங்களின் கட்டணம் ஒரு முறை கட்டணம் ரூ.280 பலமுறை கட்டணம் ரூ.425 மாதாந்திர கட்டணம் ரூ.8465 என்று இருந்தது தற்போது ஒருமுறை கட்டணத்தில் மாற்றமில்லை பலமுறை கட்டணத்தில் ஐந்து ரூபாய் குறைந்து ரூ.420ம் மாதாந்திர கட்டணம் ரூ.60 குறைந்து ரூ.8405 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மிக கனரக வாகனங்கள் ஒருமுறை கட்டணம் ரூ.455 பலமுறை கட்டணம் ரூ680 மாதாந்திர கட்டணம் ரூ.13,600 என இருந்தது தற்போது ஒருமுறை கட்டணம் ரூ.5 குறைந்து ரூ.450, பலமுறை கட்டணம் ரூ.5 குறைந்து ரூ.675, மாதாந்திர கட்டணம் ரூ.95 ரூபாய் குறைந்து ரூ.13,505 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண வசூல் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision